ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி : ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
திருச்செந்தூர் அருகே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்த வேட்பாளரும், அவரின் ஆதரவாளர்களும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருச்செந்தூர் அருகே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்த வேட்பாளரும், அவரின் ஆதரவாளர்களும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் காயாமொழி ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜசேகரன் என்பவர் ஆயிரத்து 71 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முரளிமனோகர் ஆயிரத்து 70 வாக்குகளும் பெற்றனர். இதனால் ராஜ சேகரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி முரளி மனோகரும், அவரின் ஆதரவாளர்கள் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.