"சூதாட்ட கிளப் திறப்பது வளர்ச்சியா?" - முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி கேள்வி

சூதாட்ட கிளப் திறப்பது, லாட்டரி சீட்டு கொண்டு வருவது தான், புதுச்சேரியின் வளர்ச்சியா? என்று, முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-12-26 19:12 GMT
சூதாட்ட கிளப் திறப்பது, லாட்டரி சீட்டு கொண்டு வருவது தான், புதுச்சேரியின் வளர்ச்சியா? என்று, முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில வளர்ச்சிக்கு கிரண்பேடி தடையாக உள்ளதாகவும், மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் எனவும், புதுச்சேரிக்கு வந்த குடியரசு தலைவரிடம், முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கிரண்பேடி, யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றும்போது கொள்கை விஷயங்களில் முடிவு எடுப்பதற்கான அதிகாரத்தை  வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்