"எதிர்க்கட்சியினர் நே​ர்மையற்றவர்களாக உள்ளனர்" - பிரதமர் மோடி விமர்சனம்

எதிர்க்கட்சியினர் நே​ர்மையற்றவர்களாக உள்ளனர் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

Update: 2019-12-22 10:43 GMT
டெல்லியில் அங்கீகாரம் இல்லா குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே தங்களது முதல் பணி என்றார். வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் குணாதிசயம் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அண்டை நாடுகளில் கைவிடப்பட்ட மக்களின் நலனுக்காக தான் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.  குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவு​ம், அவர்கள் நேர்மையற்றவர்கள் என்றும்  பிரதமர் மோடி சாடினார். நாடாளுமன்றத்திற்கு மக்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 
==







Tags:    

மேலும் செய்திகள்