"குடியுரிமை வழங்கும் அதிகாரம் ஆட்சியர்களிடம் இல்லை" - மத்திய அமைச்சர் விளக்கம்

குடியுரிமை வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களிடம் இல்லை என்றும் மத்திய அரசிடம் தான் உள்ளதாகவும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-21 07:59 GMT
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் குடியுரிமை சட்டம் தொடர்பாக நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் கலந்து கொண்டு பேசினார். புதிய சட்டத்தின் படி குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர்களிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாநில அரசுகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் குடியுரிமை வழங்குவதை  தடுக்க முயன்றால் அந்த அதிகாரம் வருமான வரி மற்றும் சுங்க அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறப்பு முகாம்கள் அமைத்து வருமான வரி மற்றும் சுங்க அதிகாரிகள் மூலம் மத்திய அரசு குடியுரிமை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்