"மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது" - மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி ஆர் பாலு கருத்து

சேலம் உருக்காலை தனியார்மய விவகாரத்தில் மத்திய அரசு நெருப்போடு விளையாடுவதாக மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு வாதம் செய்தார்.

Update: 2019-12-09 12:35 GMT
சேலம் உருக்காலை தனியார்மய விவகாரத்தில் மத்திய அரசு நெருப்போடு விளையாடுவதாக மக்களவையில் தி.மு.க.  எம்.பி. டி.ஆர்.பாலு வாதம் செய்தார். கேள்வி நேரத்தில் பேசிய அவர், சேலம் உருக்காலை தமிழக கலாச்சாரத்தோடு தொடர்புடையது என்று குறிப்பிட்டார். சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழகத்தை சார்ந்த அனைத்து கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தொழிற்சாலைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது நிலங்களை அளித்திருப்பதாகவும் டி. ஆர். பாலு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்