விவசாய திட்டங்கள் குறித்து 2 நாட்களில் விவரங்களையும் அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு
மகாராஷ்டிராவில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றபின் , முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களும் கிடைத்தபின், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அமைச்சரவையின் முதல் முடிவாக ராய்காட் நகரை மேம்படுத்த 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தவ் தாக்கரே கூறினார். ராய்காட் நகரம் மராட்டிய மன்னர் சிவாஜியின் தலைநகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.