"சிவசேனா ஆட்சி அமைப்பது தொடர்பாக விரைவில் தெரியும்" - சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பது தொடர்பாக வரும் நாட்களில் தெரியவரும் என, அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-03 15:40 GMT
மகாரஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது. பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள சிவசேனா, ஆட்சி பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தை செயல்படுத்துமாறு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் பாஜகவை தவிர்த்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஒருபுறம் அக்கட்சி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பது தொடர்பாக    வரும் நாட்களில் தெரியவரும் என, அக்கட்சித் தலைவர்  உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்