"காமராஜ் நகரில் அதிமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம்" - சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தகவல்
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் புதுச்சேரியில் வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்தார்.
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் புதுச்சேரியில் வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி காமராஜ் நகரில் போட்டியிட, அதிமுக சார்பில் 5 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளதாகவும், அதில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.