ஒரே தேசம் - ஒரே அடையாள அட்டை? : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

ஆதார் அட்டை , பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அடையாள அட்டை தேவை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-23 10:44 GMT
ஆதார் அட்டை , பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அடையாள அட்டை தேவை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுடில்லியில் இன்று தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான புதிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் உரையாடிய அவர் இந்த கருத்தை கூறினார். மேலும் 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மத்திய அரசு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட இருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்