"தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி கைது" - பாஜக செய்தி தொடர்பாளர் தகவலால் பரபரப்பு
தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறினார். ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற அவர், இந்தியா முழுவதும் 5 பேர் மிகப்பெரிய ஊழலில் தொடர்பு உள்ளவர்கள் என்றும், அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் விமர்சித்தார். சிதம்பரம் கைதாகி தற்போது சிறையில் இருப்பதுபோல, மற்றொரு தமிழக அரசியல்வாதியும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அஸ்வின்குமார் கூறினார்.