"கீழடி அகழாய்வில், எலும்பால் ஆன எழுத்தாணி" - அமைச்சர் பாண்டியராஜன்
"2300 ஆண்டுகள் பழமையானது என அமைச்சர் தகவல்"
கீழடி அகழாய்வில், இரண்டாயிரத்து 300 ஆண்டுகள் பழமையான எழுத்தாணி கிடைத்திருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிவகங்கை மாவட்டம் கீழடியில் எலும்பால் ஆன எழுத்தாணி கிடைத்திருப்பதாக தெரிவித்தார். அது 2 ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜன், தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்றார். அதிகளவில் தங்கம் கிடைத்திருப்பதாக கூறுவது தவறு என்றும் அவர் கூறினார்.