"தடம் புரண்ட பொருளாதாரம்" - நிர்மலா சீதாராமன் குறித்து ராகுல்காந்தி விமர்சனம்
இந்திய பொருளாதாரம் தடம் புரண்டு உள்ளதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் தடம் புரண்டு உள்ளதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், சுரங்கத்தின் முடிவில், எவ்வித வெளிச்சமும் இல்லை என பதிவிட்டுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறமையற்றவர் என விமர்சித்துள்ள ராகுல்காந்தி, பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்பதை, பிரதமர் நரேந்திரமோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். மக்களவை தேர்தல் தோல்விக்குப்பின், பதவியை ராஜினாமா செய்த ராகுல்காந்தி, நீண்ட இடைவெளிக்குப்பின், இப்போது தான் முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.