காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? - நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பின் முடிவு

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் காங்கிரசுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-08-02 01:57 GMT
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். இது அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் ராகுல்காந்தியின் முடிவை ஏற்க மறுத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கட்சி அமைப்பை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அங்கீகாரம் அளித்து தீர்மானமும் நிறைவேற்றியது. ஆனாலும் பதவி விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜிவாலா, புனியா, வேணுகோபால் உள்ளிட்டோர் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப் சுர்ஜிவாலா, நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட உள்ளதாக தெரிவித்தார். அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்