ப.சிதம்பரம் வீட்டில் நகைகள் திருடு போன விவகாரம் : விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெண் தற்கொலை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகைகள் திருடு போன விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-07-29 09:37 GMT
கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்தில் தங்க நகைகள், ரொக்கப்பணம் உள்ளிட்டவை காணாமல் போனதாக அவரது மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதைத்தொடர்ந்து அங்கு பணிபுரியும் விஜி மற்றும் வெண்ணிலா ஆகிய இரண்டு பெண்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.  விசாரணையில் பணிப்பெண்கள் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து இருவரையும் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் திருடிய நகைகளை பார்வதி என்ற பெண்ணிடம் கொடுத்து இருப்பதாக இரண்டு பேரும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து பார்வதி, பார்வதியின் மகள் , மருமகன் உள்ளிட்டோரிடம் கடந்த ஒரு வருடமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விசாரணை என்ற பெயரில் பார்வதியை போலீசார் அடிக்கடி காவல்நிலையத்திற்கு அழைத்ததால் மனமுடைந்த அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்வதியின் மகள் கவிதா கோரிக்கை விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்