விழ்ந்தது குமாரசாமி ஆட்சி : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி
கர்நாடக சட்டப்பேரவையில் மாலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.
கர்நாடக சட்டப்பேரவையில் மாலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானதால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. 119 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த குமாரசாமியை எதிர்த்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏக்கள் 3 பேரும் ராஜினாமா செய்ததால், கர்நாடகாவில் நெருக்கடி உருவானது. 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 19 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்று விட்டதால், குமாரசாமி மெஜாரிட்டியை இழந்தார். சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் குமாரசாமி வீழ்ந்ததால்,கர்நாடகாவில், கடந்த 17 நாட்களாக நீடித்து வந்த, குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.