"சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை" - அடுத்த 5 ஆண்டுகளில் வழங்க மத்திய அரசு முடிவு
அடுத்த 5 ஆண்டுகளில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த 5 கோடி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த 5 கோடி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வீ, இதில் 50 சதவிகிதம் மானவிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மதவாதத்தை அகற்றும் வகையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு என்றும் தெரிவித்தார். மேலும் மத்திய மாநில அரசு பணிகளுக்கான தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக நக்வீ தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் உள்ள மதரசாவில் பொதுப் பாடத்திட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி கூறியுள்ளார்