குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர்?

வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ள ஜெய்சங்கரை, குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-06-04 04:53 GMT
வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ள ஜெய்சங்கரை,  குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட, அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இராணி தற்போது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதால், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதுதவிர பா.ஜ.க. சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிசங்கர் பிரசாத்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், பா.ஜ.க. 3 இடங்களை நிரப்ப வேண்டிய நிலையில் உள்ளது. குஜராத்தில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பீகாரில் இருந்து ராம்விலாஸ் பாஸ்வானும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்