மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கூறிய தி.மு.க.வுக்கு தான் தோல்வி - அமைச்சர் ஜெயகுமார்
தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார் மத்திய அரசு அழைப்பு விடுத்தால் மத்திய அமைச்சரவையில் பங்கெடுப்பது தொடர்பாக கட்சி தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார். மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கூறிய தி.மு.க.வுக்கு தோல்வி கிடைத்திருப்பதாகவும் கூறினார்.