ஓடிசா சட்டப்பேரவை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் அமோக வெற்றி
ஓடிசா சட்டப்பேரவை தேர்தலில், பிஜூ ஜனதா தளம் அமோக வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 5- வது முறையாக முதலமைச்சர் ஆகிறார்.
ஓடிசா சட்டப்பேரவை தேர்தலில், பிஜூ ஜனதா தளம் அமோக வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 5- வது முறையாக முதலமைச்சர் ஆகிறார்.தலைநகர் புவனேஸ்வரத்தில் கூடிய பிஜூ ஜனதா தளம் தொண்டர்கள், தங்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். வாக்கு எண்ணிக்கையின் இறுதி நிலவரப்படி, மொத்தமுள்ள 147 இடங்களில், பிஜூ ஜனதா தளம் 113 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. அதேநேரம், பாஜகவுக்கு 23 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.