ஒய்.எஸ்.ஆர் காங் - தெலுங்குதேச கட்சியினரிடையே மோதல்
ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்குதல் பதற்றம்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆலகட்டா தொகுதியில் தங்கள் கட்சி நிர்வாகிகளை கடத்திவிட்டதாக கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சாலை நடுவே வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தெலுங்குதேச கட்சி வேட்பாளர் பூமா மோனிகா , அவரது சகோதரர் ஜெகத் ரெட்டி இணைந்து வாக்கு சாவடி அருகே கடத்தி சென்றுவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, விஜயந்தர் ரெட்டி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.