நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல், ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Update: 2019-04-11 18:29 GMT
அந்தமானில் 70 புள்ளி 67 சதவீதமும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற ஆந்திராவில்  66 சதவீதமும் சத்தீஸ்கரில் 56 சதவீதமும் தெலுங்கானாவில் 60 சதவீதமும், உத்தரகாண்டில் 57 புள்ளி 85 சதவீதமும் காஷ்மீரில் 54 புள்ளி 49 சதவீதமும் சிக்கிமில் 69 சதவீதமும், மிசோரமில் 60 சதவீதமும் நாகலாந்து மற்றும் மணிப்பூரில் தலா 78 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.இதுபோல, திரிபுராவில் 82 சதவீதம் ,அசாமில் 68 சதவீதம், மேற்கு வங்காளத்தில் 81 சதவீதம், அருணாசல பிரதேசத்தில் 66 சதவீதம் பீகாரில் 50 சதவீதம், லட்சத்தீவுகளில் 66 சதவீதம், மகாராஷ்டிராவில் 56 சதவீதம், மேகாலயாவில் 67 சதவீதம், ஒடிஷாவில் 68 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 64 சதவீதம் என வாக்குகள் பதிவாகி உள்ளன.கிராமப்புறங்களில் இருந்து முழுமையாக தகவல் கிடைத்ததும் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்