"கருத்து வேறுபாடு இருந்தால் தேச விரோதியா?" - அத்வானி
கருத்து வேறுபாடு உள்ளவர்களை ஒரு போதும் தேச விரோதி என்று தான் அழைத்தது இல்லை என்று பா.ஜ.க. வின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
கருத்து வேறுபாடு உள்ளவர்களை ஒரு போதும் தேச விரோதி என்று தான் அழைத்தது இல்லை என்று பா.ஜ.க. வின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியிலிருந்து 6 முறை தம்மை எம்.பி.யாக தேர்ந்து எடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். தமது கருத்துக்கு உடன்பாடு இல்லாதவர்களை தேச விரோதி என்றோ, எதிரி என்றோ தான் பார்த்து இல்லை என்றும் அனைவரின் கருத்தையும் மதிப்பதே பா.ஜ.க. வின் கொள்கை என்றும் குறிப்பிட்டுள்ள அத்வானி, முதலில் நாடு தான் முக்கியம் என்றும், பிறகு தான் கட்சி என்றும் தெரிவித்துள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பலம் என்று அத்வானி சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொருவரும் தங்களது நேர்மையை சுயபரிசோதனை மேற்கொள்ள தேர்தல் வாய்ப்பாக அமையும் என்றும் அத்வானி கூறியுள்ளார். அத்வானியின் இந்த கருத்து பா.ஜ.க. வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.