பிரதமர் மோடி காலாவதியான பிரதமர் - மம்தா பானர்ஜி

பிரதமரின் "ஸ்பீட் பிரேக்கர்" விமர்சனத்திற்கு மம்தா பதிலடி

Update: 2019-04-03 20:50 GMT
பிரதமர் நரேந்திர மோடி, தம்முடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சவால் விடுத்துள்ளார். கொல்கத்தாவில், பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, தம்மை 'ஸ்பீட் பிரேக்கர்' என, பிரதமர் மோடி விமர்சித்ததற்கு, பதிலடியாக காலாவதியான பிரதமர் என கொடுத்துள்ளார். கடந்த 5 வருடங்களாக பிரதமர் மோடி, மக்களுக்கு என்ன செய்தார் என கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதை கைவிட வேண்டும் எனவும் குற்றஞ்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்