திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி பிரசாரம்
தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் அரூர் சட்டமன்ற வேட்பாளர் கிருஷ்ண குமார் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின், அரூரில் பிரசாரம் செய்தார்.
தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் அரூர் சட்டமன்ற வேட்பாளர் கிருஷ்ண குமார் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின், அரூரில் பிரசாரம் செய்தார். மக்கள் மத்தியில் பேசிய அவர், மோடி எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதாக கூறினார். தேர்தல் வாக்குறுதியாக அனைவரது வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாக கூறி ஆட்சிக்கு வந்த மோடி, மக்களை ஏமாற்றிவிட்டதாக கூறினார்.