"மதச்சார்பின்மை - ஜனநாயக மாண்புகள் வலுப்படுத்தப்படும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் தகவல்

மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-03-29 06:12 GMT
மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்படும் என்றும், விலைவாசி உயர்வை பொறுத்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்பட்டு குடும்பத்திற்கு மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படும் என்றும், இதற்கான அதிகபட்ச விலை கிலோவுக்கு இரண்டு ரூபாயாக  நிர்ணயிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவன சிகிச்சை முறைகள் நிறுத்தப்பட்டு, இலவச பொது சுகாதார திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், பட்ஜெட்டில், பொது சுகாதாரத்திற்கு ஐந்து சதவீத நிதி ஒதுக்கப்படும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்