ரூ.15 லட்சம் வேண்டாம், 15 ரூபாயாவது மோடி தந்தாரா? - ஸ்டாலின் கேள்வி

அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, 15 ரூபாயாவது தந்தாரா என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-03-29 04:58 GMT
அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, 15 ரூபாயாவது தந்தாரா என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.வி.சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது இந்த கேள்வியை அவர் எழுப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்