கருப்புப் பணம் ஒழிப்பு என்னாச்சு?" பிரசாரத்தில் கனிமொழி கேள்வி

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2019-03-22 04:57 GMT
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார். 300 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் விலை, தற்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதாக கனிமொழி குற்றம்சாட்டினார். பரமக்குடி சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமாரையும் அறிமுகப்படுத்தி வைத்து பேசிய அவர், மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தப்படும் என்றும் கனிமொழி கூறினார். கமுதியில் பிரசாரம் செய்த அவர், புயல் பாதித்த மக்களை பிரதமர் மோடி பார்க்கவில்லை என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்