தேர்தல் கூட்டணிக்கு தயாராகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தேர்தல் கூட்டணிக்கு தயாராகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குக்கள் பற்றி ஒரு தொகுப்பை இப்போது பார்ப்போம்.

Update: 2019-02-12 09:16 GMT
கடந்த 1964 ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது.  அதில் ஒரு அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக உருவெடுத்தது. 1967 தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  4 சதவீத வாக்குகள் பெற்று, 11 இடங்களில் வெற்றி பெற்றது. 

1971 தமிழக சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1.65 சதவீத வாக்குகள் பெற்று, போட்டியிட்ட 37 இடங்களிலும் தோற்றது. 1977 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  2.8 சதவீத வாக்குகள் பெற்று, 12  தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1980 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3.2 சதவீத வாக்குகள் பெற்று 11 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  2.8 சதவீத வாக்குகள் பெற்று, 5  தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1989 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3.5 சதவீத வாக்குகள் பெற்று, 15 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து  3.1 சதவீத வாக்குகள் பெற்று, 1 இடத்தில் வெற்றி பெற்றது.

1996 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-தமாகா உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1.68 சதவீத வாக்குகள் பெற்று, 
1  தொகுதியில் வெற்றி பெற்றது. 1999 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக அணிக்கு மாறிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2.4 சதவீத வாக்குகள் பெற்று, ஒரு இடத்தில் வென்றது. 2001 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1.7 சதவீத வாக்குகள் பெற்று, 6 இடங்களில் வெற்றி பெற்றது.

2004 நாடாளுமன்ற தேர்தலில், திமுக-காங்கிரஸ் அணிக்கு மாறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.9 சதவீத வாக்குகள் பெற்று, 2 தொகுதிகளில் வென்றது. கடந்த 2006 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.7 சதவீத வாக்குகள் பெற்று, 9 இடங்களில் வெற்றி பெற்றது.

2009 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக அணிக்கு மாறிய, மார்க்சிஸ்ட் 2.2 சதவீத வாக்குகள் பெற்று, ஒரு இடத்தில் வென்றது. 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.4 சதவீத வாக்குகள் பெற்று, 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2014 நாடாளுமன்ற தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன்  கூட்டணி அமைத்து 9 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் , 0.5 சதவீத வாக்குகள் பெற்று, அனைத்து இடங்களிலும் தோற்றது. 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , 25 இடங்களில் போட்டியிட்டு, 0.72 சதவீத வாக்குகள் பெற்று, அனைத்து தொகுதிகளிலும்  தோல்வியுற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்