கூட்டணி பேச்சு - அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு பதில்

நாடு முழுவதும் பாஜகவுக்கான கதவை மக்கள் அடைக்க இருப்பதாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சாடியுள்ளார்.

Update: 2019-02-05 09:07 GMT
நாடு முழுவதும் பாஜகவுக்கான கதவை மக்கள் அடைக்க இருப்பதாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சாடியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதற்கு தெலுங்கு தேசம் கட்சிக்கான கதவு அடைக்கப்பட்டதாக, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ஆந்திர மாநிலம் அமராவதியில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்பதால், பாஜகவுக்கு, தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார். பா.ஜ.க.வுக்கான கதவு அடைக்கப்பட இருப்பதை அமித்ஷா நினைவில் கொள்ள வேண்டும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்