காவலர் தற்கொலை - ராமதாஸ் அறிக்கை
காவலர் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு உடனடியாக காவலர் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காவலர் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு உடனடியாக காவலர் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்த மணிகண்டன் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் 211 காவலர்கள் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மூன்று காவலர்கள் செய்ய வேண்டிய பணியை ஒரு காவலர் செய்வதாகவும், காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.