"துணை முதலமைச்சருடன் விசாரணை முடிகிறது?"
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை துணை முதலமைச்சருடன் முடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆறுமுகசாமி ஆணையத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 23-ம் தேதி ஆஜராவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது வரும் 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் ஆஜராகும் நாளுடன் விசாரணையை முடித்துக் கொள்வதாக ஆணையம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், 14 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாக சசிகலா தரப்பு மனு செய்தது. இதனால் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது . இதே போல் திமுக தலைவர் ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும் என்று ராஜ செந்தூர்பாண்டியன் கூறியிருந்தது என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.