ஒப்பந்தங்களில் முறைகேடு என புகார் : அமைச்சர் வேலுமணிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அமைச்சர் வேலுமணி, தலைமைச் செயலாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்...

Update: 2019-01-04 07:15 GMT
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் வழங்கியதில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆளுநர் ஒப்புதல் பெற்று  அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்கு பதியக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் முறையாக நடக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு ஜனவரி 23ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்பு துறை, அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு உத்தரவிட்டனர். மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்தும் உத்தரவிடப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்