மக்கள் நீதி மய்யத்தில் பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-12-25 12:49 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 575 பொறுப்பாளர்களை நியமித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார். பதவியின் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்றும், மக்களின் தொண்டர்களாக செயலாற்ற வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பதவியை சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல் மக்களின் நலன் சார்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்