கீழடியில் 5வது கட்ட அகழ்வாய்வுக்கு அனுமதி - அமைச்சர் பாண்டியராஜன்

மதுரை உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் தமிழ்க்கூடல் தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2018-11-28 14:26 GMT
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்தார். தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு தமிழ்க்கூடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் தமிழ்ச் சங்க கட்டிடத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கீழடியில் 5வது கட்ட அகழ்வாய்வு நடத்த அனுமதி கிடைத்துள்ளதாகவும் நான்காவது கட்ட ஆய்வில் கிடைத்த பொருட்களை கால நிர்ணயம் செய்வதற்கு அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்