முதலமைச்சர் பழனிசாமி நாளை மறுநாள் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ஆய்வு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு ரயில் மூலம் திருவாரூர் செல்கிறார்.

Update: 2018-11-26 09:59 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ஆம் தேதி பார்வையிட்டார். அப்போது பெய்த கடுமையான மழையின் 
காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு அவர் செல்லவில்லை. இந்த நிலையில் விடுபட்ட இந்த 2 மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு ரயில் மூலம் திருவாரூருக்கு செல்கிறார். தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் அவர் ஆய்வு நடத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்