ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் முத்திரை பதித்து அனுப்பி வைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Update: 2018-11-22 10:31 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஜினிகாந்த் அறிவுறுத்தலின் பேரில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இருந்து இந்த பொருட்கள் 5 வாகனங்களில் புறப்பட்டது. பார்சல்களில், ரஜினி மக்கள் மன்ற முத்திரை பதிக்கப்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, நிவாரண பொருட்கள் வழங்குவதில் அரசியல் செய்யவில்லை என ரஜினி மக்கள் மன்ற அமைப்பாளர் இளவரசன் விளக்கம் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்