ராகுல்காந்தியை சந்தித்தார், சந்திரபாபு நாயுடு - பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்

ராகுல்காந்தியை சந்தித்தார், சந்திரபாபு நாயுடு - பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்

Update: 2018-11-02 06:12 GMT
தேசிய அரசியலில் புதிய திருப்பமாக, மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் புதிய வியூகம் வகுத்துள்ளன. தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, பிரசார யுக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, இரு தலைவர்களும் விவாதித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, பாஜகவை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்படுவோம் என உறுதி அளித்தார். ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு இவ்வாறு நேரடியாக சந்தித்து பேசுவது இதுவே முதன்முறையாகும். தெலுங்கு தேசம் கட்சி உதயமாகி 36 ஆண்டுகளுக்குப்பின், இப்போது தான் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்