திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக, மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன், முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
விரைவில் வரவுள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், இடைத்தேர்தல் குறித்து மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளனர். மதுரையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி மதுரை புறப்பட்டுச் சென்றார்.