திமுக கண்டன பொதுக்கூட்டங்களுக்கு மக்களை திரட்டி ஆற்றலை காட்ட வேண்டும் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக திமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டங்களுக்கு மக்களை திரட்டி ஆற்றலை காட்ட வேண்டும் என்று, அக்கட்சி தொண்டர்களை ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக திமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டங்களுக்கு மக்களை திரட்டி ஆற்றலை காட்ட வேண்டும் என்று, அக்கட்சி தொண்டர்களை ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக சார்பாக தமிழகம் முழுவதும் அக்டோபர் 3 மற்றும் 4ம் தேதிகளில் 120 இடங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் ஒவ்வொரு துறையிலும் கோடிக் கணக்கில் ஊழல் நடைபெறுவதாகவும் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவிரி டெல்டா பகுதியில், புதிதாக 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, 'வேதாந்தா' நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பாக, அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், "ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும்" என கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழக அரசைப் பற்றி, ஒவ்வொரு வாக்காளரிடமும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும் எனவும் தொண்டர்களை ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.