வரும் 25 ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் திமுகவை கண்டித்து அதிமுக பொதுக்கூட்டம்

வரும் 25 ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் திமுகவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

Update: 2018-09-20 20:16 GMT
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது, அந்நாட்டு ராணுவத்திற்கு அப்போதைய மத்திய அரசு உதவியதாக அண்மையில் தந்தி டிவி நேர்காணலில், முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறியிருந்தார். அதனை மேற்கோள் காட்டி, வருகிற 25 ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் திமுகவை கண்டித்து, பொது கூட்டங்கள் நடத்தப்படும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதன் படி, சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தேனியில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும், திருவள்​ளுர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்