பெட்ரோல் - ரூ.6.78 : டீசல் - ரூ.4.97 விலை குறைக்கலாம் - டாக்டர் ராமதாஸ்
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அவற்றின் விலையை குறைப்பதில் மத்திய அரசுக்கு மட்டுமே பங்கு இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை 6 ரூபாய் 78 காசு அளவுக்கும் டீசல் மீதான வரியை 4 ரூபாய் 97 காசு என்ற அளவுக்கும் குறைக்க வேண்டும் என அறிக்கையொன்றில் வலியுறுத்தி உள்ள டாக்டர் ராமதாஸ் உலக சந்தையில் கச்சா எண்ணைய் விலை குறைந்து பெட்ரோல் லிட்டருக்கு 65 ரூபாய் என்றும், டீசல் லிட்டருக்கு 55 ரூபாய் என்றும் குறையும் போது, அப்போதைய சூழலுக்கு ஏற்ப குறைக்கப்பட்ட மதிப்பு கூட்டு வரி விகிதங்களை தமிழக அரசு உயர்த்தி கொள்ளலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.