அதிமுக-வின் தற்போதைய தலைவர்கள் படிப்படியாக உயர்ந்தவர்கள் - செல்லூர் ராஜூ
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர்கள், அதிமுகவின் தற்போதைய தலைவர்கள், கட்சியில் படிப்படியாக உயர்ந்து வந்தவர்கள் என்றும், அதிமுகவில் உள்ள ஒவ்வொருவரும் வெற்றிக்காக களம் அமைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.