"சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய முயற்சி" - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய முயற்சி நடப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு சம்மன் அனுப்பியது வேதனையளிப்பதாகவும் தமது சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மாணவி சோபியா கனடாவில் மேற்படிப்பினை தொடர, தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தனது புகாரை திரும்ப பெற வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) September 7, 2018
மேலும், “பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!