இந்தியை வளர்க்க மத்திய அரசு திட்டம்

அரசின் அன்றாட பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்தி மொழியை வளர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Update: 2018-09-01 03:18 GMT
மத்திய அரசு அலுவலக பணிகளில் இந்தியை வளர்ப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அலுவலக மொழி துறையின் செயலாளர் சைலேஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தினசரி அரசு அலுவல்களில், பொதுமக்களிடம் அதிகபட்ச அளவில் இந்தி மொழியை கொண்டு செல்வது பற்றி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டடது. 

ஆங்கில வார்த்தைகளை உடனடியாக இந்தியில் மொழிமாற்றம் செய்யும் 'கந்தஷ்' மென்பொருளை பயன்படுத்துவது மற்றும் அதன் பயன்பாட்டை எளிமைப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அலுவலக மொழி துறை சார்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான 15 ஆயிரம் இந்தி வார்த்தைகளை அப்லோடு செய்யவும் தீர்மானிக்கப்ட்டது. இதுபோல, இந்தியை எளிதாக கற்கும் வகையில், 'லைலா மொபைல் ஆப்'பை பிரபலப்படுத்துவது மற்றும் 16 மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் எளிதாக இந்தி கற்கும் வகையில், செப்டம்பர் 14ம் தேதி முதல் 'பிரவா' என்ற திட்டத்தை அறிமுகம் செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்