ஸ்டாலின் கடந்து வந்த பாதை...

திமுகவில் சாதாரண தொண்டராக இருந்து, செயல் தலைவராக உயர்ந்து, இப்போது தலைவராகப் போகும் ஸ்டாலின் கடந்து வந்த பாதை...

Update: 2018-08-26 08:40 GMT
1953ஆம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஸ்டாலின். கடந்த 1953ஆம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஸ்டாலின். பள்ளிப் பருவத்திலேயே திமுக உறுப்பினராக இருந்த ஸ்டாலின், 1967-1968ஆம் ஆண்டு காலகட்டத்தில் நண்பர்களுடன் கோபாலபுரத்தில் 'இளைஞர் திமுக' என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். தனது செயல்பாட்டால் இளைஞரணி அமைப்பை வளர்த்த ஸ்டாலின், அந்த அமைப்பில் மாநிலச் செயலாளராக உயர்ந்தார். 1984ம் ஆண்டு, முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியடைந்தார். அதே தொகுதியில் 1991-லும் அங்கு  தோல்வி கண்டார். அதேநேரம், 1989, 1996, 2001, 2006, 2011, 2016ஆம் ஆண்டு  தேர்தல்களில் 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார்.

பின்னர் சென்னை மேயராக, 1996ம் ஆண்டு தேர்வான ஸ்டாலின், 2001-ம் ஆண்டும் வெற்றி பெற்றார். கடந்த 2006ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்ற போது, முதல்முறையாக உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். பின்னர், 2009ம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை துணை முதலமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வரும் ஸ்டாலின், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் அக்கட்சியின்  செயல் தலைவராக இருந்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து, தலைவர் பதவிக்கு தற்போது அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்