திமுக தலைவர் கருணாநிதி இறப்பு : தலைவர்கள்,முக்கிய பிரமுகர்கள் இரங்கல்
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.
திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து தலைவர்கள்,முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
கருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு, பிரதமர் நரேந்திரமோடி, இறுதி அஞ்சலி செலுத்தினார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர், பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடற்கரை மெரீனாவில் உள்ள ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளம் வந்து இறங்கினார்.
அங்கிருந்து கார் மூலம் ராஜாஜி அரங்கம் வந்தடைந்த பிரதமர் நரேந்திரமோடி, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து, இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது, அருகில் இருந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக மூத்த தலைவர் இல கணேசன் உள்ளிட்டோரும் வந்து, கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
" கோடானு கோடி மக்களின் இதயங்களில் வாழ்வார்" - கருணாநிதிக்கு, பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும், இதயங்களிலும் கருணாநிதி வாழ்வார் என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார். தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், கருணாநிதியின் பல்வேறு சாதனைகளை, பிரதமர் நரேந்திரமோடி பட்டியலிட்டு உள்ளார். சமூக நீதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர், கருணாநிதி என்றும் பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
In Chennai, I paid tributes to an extraordinary leader and a veteran administrator whose life was devoted to public welfare and social justice.
— Narendra Modi (@narendramodi) August 8, 2018
Kalaignar Karunanidhi will live on in the hearts and minds of the millions of people whose lives were transformed by him. pic.twitter.com/torAPw1gUe
கருணாநிதிக்கு, சோனியா காந்தி புகழாரம்
திமுக தலைவர் கருணாநிதி மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்து உள்ளதாக மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி தெரிவித்து உள்ளார்.
தமிழகம் மற்றும் தேசிய அரசியலில், மிக உயர்ந்த தலைவர் என புகழாரம் சூட்டி உள்ள சோனியா காந்தி, பொது வாழ்வில், கருணாநிதி உயர்ந்த இடத்தை எட்டி பிடித்திருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். தனது நீண்ட வாழ்க்கை பயணத்தில், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைத்தவர், கருணாநிதி என்றும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த தலைவர் கருணாநிதி, தமக்கு ஒரு தந்தையை போன்றவர் என குறிப்பிட்டு உள்ள சோனியாகாந்தி, அவரது மறைவு தனிப்பட்ட முறையில் தனக்கு இழப்பு என்றும், கருணாநிதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பதிவு செய்துள்ளார்.
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார், ராகுல்
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி அரங்கம் வந்த ராகுல்காந்தி, அங்கு கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் நலம் விசாரித்தார்.
கருணாநிதி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
சென்னை - ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி , ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, மற்றும் பீஹார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல், உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதி உடலுக்கு தமிழக முதல்வர் அஞ்சலி
சென்னை - ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், டி. ஜெயக்குமார், தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரும் கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்தார்.
கருணாநிதி உடலுக்கு டி.டி.வி. தினகரன் அஞ்சலி
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நாஞ்சில் சம்பத் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தங்கர் பச்சான் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு முத்தரசன் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு வேல்முருகன் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தம்பிதுரை இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு விஷால் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
கருணாநிதி மறைவு : தலைவர்கள் இறுதி அஞ்சலி
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு, தமிழக தலைவர்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி , புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதேபோல, இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு G.K.வாசன் இரங்கல்

கருணாநிதி உடலுக்கு ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி - மனைவி, மகளுடன் அஞ்சலி செலுத்தினார், ரஜினி
சென்னை - கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை, ராஜாஜி அரங்குக்கு தனது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோருடன் வந்தார். அங்கு, கருணாநிதி உடலுக்கு, மலர் வளையம் வைத்து, ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார், நடிகர் கமல்ஹாசன்
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். அப்போது, கமல்ஹாசன் கருப்பு சட்டை அணிந்திருந்தார். கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். கமல்ஹாசனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும் வந்திருந்தனர்.