சட்டப்பேரவைக்குள் செல்ல பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திற்குள், நுழைய பா.ஜ.க.வைச் சேர்ந்த, 3 நியமன உறுப்பினர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-16 11:22 GMT
"பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுப்பு"

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு, பா.ஜ.க.,வைச் சேர்ந்த சுவாமி நாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகிய மூவரும், நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களை சட்டப் பேரவைக்குள் அனுமதிக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'நியமனம் செல்லும் என உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, வரும் 19ஆம் தேதி வரவுள்ளது. இந்நிலையில், நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்தனர். ஆனால், நுழைவு வாயில் பூட்டப்பட்டு, அங்கேயே மூவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். தங்களை அனுமதிக்காதது குறித்து, எழுத்துப்பூர்வ விளக்கம் தருமாறு, மூவரும் போலீசாருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


Tags:    

மேலும் செய்திகள்