ப.சிதம்பரம் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜர்

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Update: 2018-06-25 06:45 GMT
வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்து விவரங்கள் குறித்து வருமான வரி கணக்கில் காட்டவில்லை என புகார் எழுந்தது. இதற்கு ப.சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம் அளித்த நிலையிலும், கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை புகார் மனு அளித்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இன்றைய தினம் ப.சிதம்பரம் குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். 




அதன்படி, ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்