ஜம்மு- காஷ்மீரில் ஆட்சி கவிழ்ப்பு : பேரவையில் கட்சிகள் பலம் என்ன?

ஜம்மு - காஷ்மீர் : பேரவையில் கட்சிகள் பலம் மொத்தம் - 87 : ஆட்சிக்கு தேவை - 44

Update: 2018-06-19 13:49 GMT
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தியுடனான கூட்டணியை பாஜக முறிந்து கொண்டதால், அம்மாநில கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விட்டது. தற்போதைய சட்டப்பேரவையை பொறுத்தவரை, ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்கள் உள்ளது. பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும் உள்ளன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, 12 இடங்கள் மட்டுமே இருக்கிறது. ஜம்மு- காஷ்மீர் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்கள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சுயேட்சை உறுப்பினர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ள ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில், மொத்தம் 87 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, ஆட்சி அமைக்க  44 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகி உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்