பசுமை சாலை திட்டத்தை எதிர்ப்பவர்களை கைது செய்வதா..? - ஸ்டாலின் எச்சரிக்கை
பசுமை சாலைத் திட்டத்திற்காக மக்களையும், தாய்மார்களையும் மிரட்டுவது தொடர்ந்தால், விவசாயிகளை திரட்டி திமுக போராட்டம் நடத்தும் என்று செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சென்னை - சேலம் எட்டு வழி பசுமை சாலைக்காக அதிகாரிகளை வைத்து அவசரம் அவசரமாக நிலங்களை அளவிடுவது, கல் ஊன்றும் பணிகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சேலத்தில் போராடும் விவசாயிகள், தாய்மார்களை காவல்துறையை வைத்து கைது செய்வதும், நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து துன்புறுத்துவதும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பசுமை சாலைத் திட்டத்தில் மக்கள் கருத்தை அவசரமின்றி பொறுமையாகவும் முழுமையாகவும் கேட்டறிய வேண்டும் என்றும், பொது மக்களையும், விவசாயிகளையும், தாய்மார்களையும் காவல்துறை மூலம் மிரட்டுவது தொடர்ந்தால், திமுக மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
பசுமை சாலைத்திட்டம் - ஸ்டாலின் எச்சரிக்கை
பசுமை சாலைக்காக அவசரம் அவசரமாக நிலங்களை அளவிடுவது, கல் ஊன்றுவது கண்டனத்திற்குரியது
போராடும் விவசாயிகள், தாய்மார்களை கைது செய்வது, நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து துன்புறுத்துவதால் மக்கள் கொந்தளிப்பு
பசுமை சாலைத் திட்டத்தில் மக்கள் கருத்தை முழுமையாக கேட்டறிய வேண்டும்
காவல்துறை மூலம் மிரட்டுவது தொடர்ந்தால் திமுக மிகப்பெரிய போராட்டம் நடத்தும்